காதலிக்கச் சொல்லாதீர்

மலர்களைக்

காதலிக்கச்

சொல்லுங்கள்…..

மகிழ்வோடு

அதனுடன்

மணம் பரப்புவேன்..!

கடலைக்

காதலிக்கச்

சொல்லுங்கள்…..

களிப்பு பொங்க

அலையோடு

கைகோர்த்து

நடனமாடுவேன்…!

தென்றலைக்

காதலிக்கச்

சொல்லுங்கள்…..

திகட்டாது

அதனுடன்

எவ்விடங்களிலும்

சுற்றி வருவேன்….!

நிலவைக்

காதலிக்கச்

சொல்லுங்கள்…..

முழு அழகோடு

வான வீதியில்

அதனுடன்

உலா வருவேன்….!

இயற்க்கையைக்

காதலிக்கச்

சொல்லுங்கள்…..

அதன்

அழியா அழகோடு

ஒன்றி திளைத்திடுவேன்…!!

இருளைக்கூட

காதலிக்கச்

சொல்லுங்கள்…..

இறுக்கமாக

கட்டியனணைத்து

அதனுடன்

இரகசியம்

பேசுவேன்….!

எதையும்

காதலிக்கச்

சொல்லுங்கள்…..

மனப்பூர்வமாய்

ஏற்றுக்கோள்வென்…..!!!!

தயை செய்து

மீண்டும்

ஒரு

பெண்ணை மட்டும்

காதலிக்கச்

சொல்லாதீர்

எற்படுத்தும்

வடுக்களைத்

தாங்க

வலுவில்லை

மனதில்…..!?!?!?

2 பதில்கள் “காதலிக்கச் சொல்லாதீர்” க்கு;

  1. kalyanakamala சொல்வதென்னவென்றால்:

    இளம் காதலரே!
    அதற்குள் இப்படி நொந்து போகலாமா?> இன்னும் எவ்வளவோ இருக்கு வாழ்க்கையில். துணிவாகப் புறப்படுங்கள். பெண்களைக் காதலித்து தாடி வளர்த்ததாகக் கூறும் ஆண்களுடன் சேராதீர்கள். ஆலமரமான ஆண்கள் நிறைய பேர்.வைரமுத்து வாடையில் கவிதை எழுதும் உங்களுக்கு இந்த ஊக்கம் போதுமென நினைக்கிறேன்.

    அன்புடன்
    கமலா

  2. சத்தியராஜ் சொல்வதென்னவென்றால்:

    Hello,

    thank you for your comment and the support.

    thank for visiting my page.

    with best regards

    sathiyraj

    south korea

மறுமொழி இடுக