மிஸ்டர் மொக்கை

மிஸ்டர் மொக்கை பூச்செடிகள் விற்கும் கடைக்கு வந்தார்..

மஞ்சள் ரோஜாச் செடி இருக்கா..?

இல்லையே சார்.. கருப்பு ரோஜா செடி இருக்கு .. பார்க்கறீங்களா..?

இல்லப்பா.. மஞ்சள் ரோஜாதான் வேணூம்..

காஷ்மீர் ரோஜா செடி இருக்கு பாருங்க சார்.. பளபளன்னு இருக்கும்..
மஞ்சள் ரோஜா சோகை புடிச்ச மாதிரி இருக்கும் சார்..!

எனக்கு தெரியும்பா.. ஆனா .. ” நான் ஊர்லேருந்து திரும்பற வரைக்கும்
ஒழுங்கா இந்த மஞ்சள் ரோஜாவுக்கு தண்ணி ஊத்துங்க.. ஏதாச்சும்
ஆச்சுது.. நான் மனுஷியா இருக்க மாட்டேன்”னு சொல்லிட்டுப் போன
என் மனைவிக்கு அது தெரியமாட்டுதே….!
_________________

ஒரு மனிதர் ஒரு குறும்புக்காரச் சிறுவனை அங்கு அழைத்து
வந்திருந்தார்..சிறுவனோ அங்கிருக்கும் பொருள்களைத் தள்ளுவதும்,
தூக்கி எறிவதுமாக இருந்தான்..

அந்த மனிதர் அடிக்குரலில் உறுமினார்..

மொக்கை.. கம்முன்னு வா.. அசிங்கமா நடந்துக்காதே..

மீண்டும் மீண்டும் சிறுவன் அட்டூழியம் செய்துகொண்டே இருக்க,
தந்தையும் வேண்டாம் மொக்கை.. கூடாது மொக்கை.. அப்புறம்
அடி விழும்..அசிங்கமாயிடும் மொக்கை.. என்று கூறியவாறே இருந்தார்..
இவ்வளவையும் ஒரு பெண்மணி அருகிலிருந்து கவனித்துக் கொண்டே
இருந்தாள்.. கடைசியாக சொன்னாள்..

ஆனாலும் நீங்க ரொம்ப டீசண்ட்.. பொது இடத்துல அடிக்கக் கூடாதுன்னு
எவ்வளவு பொறுமையா இருந்தீங்க.. [பையனைப் பார்த்து..]
ஏம்பா மொக்கை.. நீ இவர் பையனா..?

பையன் சொன்னான்..

நான் அவர் பையந்தான்.. ஆனா மொக்கைங்கறது என் பேர்
இல்லே.. எங்க அப்பா பேரு..!
_________________

மிஸ்டர் மொக்கை கார் ஓட்டிட்டு போகும்போது போலீஸ் தடுத்து
நிறுத்திடுச்சு.. ஓட்டுநர் உரிமத்தை சோதனை பண்ணியப்போது
அது சென்ற வருடத்துடன் காலாவதியானது தெரிய வரவே
மொக்கையிடம் போலீஸ் விளக்கம் கேட்டது..

மொக்கை சொன்னார்…

அதனால் என்ன இன்ஸ்பெக்டர்.. இந்தக் காரின் ஆண்டு வரி, காப்பீடு
கூட போன வருடத்தோடு காலாவதி ஆயிடுச்சு.. இந்த கார்
ஒழுங்காதானே ஓடுது..?
___________________

மாசியும் சுசியும் வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் ஆட்கள்..
ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு சிலிண்டர் போட போனாங்க.. 4 வது மாடியில் ஒரு வீட்டுல நின்னுட்டு இருக்கும்போது மாசி கேட்டார்..

சுசி .. பில் புத்தகம் கொடு..

என்கிட்ட எங்கே இருக்கு..நீதானே வச்சிருந்தே..?

இல்லே சுசி.. கேஷ் பேக்கில வச்சிருப்பே பாரு..

ஐயோ கேஷ் பேக்கா..? கீழே ட்ரை சைக்கிள்ல மாட்டியிருக்கேனே..

அடப்பாவி.. எவனாவது திருடிட்டா என்ன பண்றது..?

இருவரும் புயல் வேகத்தில் படியில் இறங்கி கீழே ஓடினர்.. அப்போது அவர்கள் பின்னால் ஒரு ஆள் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தார்.. கீழே பேக் இருக்கவே நிம்மதி அடைந்த மாசி யார் பின்னால் ஓடி வந்ததெனப் பார்க்க… அவர் மிஸ்டர் மொக்கை..!

நீங்க ஏன் சார் இப்படி அலறியடிச்சுகிட்டு ஓடி வந்தீங்க..?

மொக்கை சொன்னார்..

ஏம்பா.. சிலிண்டரைக் கொண்டாந்து வச்சிட்டு ஒரே ஓட்டமா ஓடினா நான் என்னத்தை நினைக்கிறது..? சிலிண்டர் வெடிக்கப் போகுதுன்னு ஓடறீங்க போல இருக்குன்னு நானும் ஓடியாந்தேன்..!

ஒரு பதில் “மிஸ்டர் மொக்கை” க்கு;

  1. goodies சொல்வதென்னவென்றால்:

    மிஸ்டர் மொக்கை

    immmmm…

    nalla mokkai…

    keep it up man..

மறுமொழி இடுக