நகைச்சுவைத் துணுக்குகள்

செவ்வாய்க் கிழமை ஜூலை 21, 2009

ஜோவும், நண்பரும் காபி ஷாப் சென்றிருந்தனர்.
நண்பர் : “காபி ஆறதுக்குள்ள குடிச்சுடு.”
ஜோ : “சூடான காபி (Hot coffee) 5 ரூபா, ஆறிய காபி (Cold coffee) 10 ரூபானு போட்டுருக்காங்க இல்ல, அதனாலதானே!.”

*****

தபால்காரர் (ஜோவிடம்) : “உனக்கு வந்திருக்கும் பார்சலை கொடுக்கறதுக்காக 5 கி.மீ வந்தேன் தெரியுமா?”
ஜோ : “அதுக்கு பார்சலை தபால்ல அனுப்பியிருக்கலாமே?”

*****

நண்பர் : “என்ன பண்ணிட்டிருக்க ஜோ?”
ஜோ : “எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்”
நண்பர் : “அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?”
ஜோ : “அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்”

*****

ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த ஜோ பக்கத்திலிருந்தவரிடம்,
ஜோ : “எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?”
நபர் : “இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்”

*****


இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!TAKE IT EASY

புதன் கிழமை ஜூன் 3, 2009

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!TAKE IT EASY smile.gif
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி
இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும்
இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும்,
அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..!
ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில்
[அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ்
சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க.
அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து
வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல்
விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா,
அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு,
அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க
கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக்
கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க..
[ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய்
நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி
கப்படிக்க வைப்பீங்க.!

11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ… ஒரு கும்பல் வந்து
ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம்
பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட்
பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ
இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட
மறக்கவே மாட்டீங்க..!

13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன்
செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு
சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர்
சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப்
பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க
நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில்,
3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா
வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட
அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம். பிரஷர் குக்கர்,
காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர்,
மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல கறிக்குழம்பு வச்சுத்
தின்னுட்டு புள்ளக்குட்டியோட சந்தோஷமா விழுந்து கெடக்க
மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, ஊருல தகராறு
பண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன்
பார்ப்பீங்க..

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே
உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..!


வேலைக்கான நேர்காணலில்…உண்மையைச் சொல்ல முடிந்தால்..

ஞாயிற்றுக்கிழமை ஜூன் 1, 2008

நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?

எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும்..எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்.. அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம் இல்லே..!

உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?

உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்.. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.

உங்களுடைய தனித்திறமை என்ன..?

வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன்.. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்.. உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்..அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன்.. இதைத் தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது.

உங்கள் மிகப்பெரிய பலம்..?

இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்.. மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..

பலவீனம்..?

ஹி..ஹி.. பெண்கள்..!

இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?

அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன்.. அந்த சாதனைகளை பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா..?

நீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?

ஆண்டவன் அருள்தான் காரணம்.. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.

ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?

நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ.. அதே காரணத்துக்காகத்தான்..!

இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?

நல்ல சம்பளம், 0 % வேலை, பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண், நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம். அது போதும்.
_________________


The woman in your life…

வெள்ளிக்கிழமை மே 2, 2008

Tomorrow you may get a working woman, but you should marry her with these facts as well.

Here is a girl, who is as much educated as you are;
Who is earning almost as much as you do;

One, who has dreams and aspirations just as
you have because she is as human as you are;

One, who has never entered the kitchen in her life just like you or your
Sister haven’t, as she was busy in studies and competing in a system
that gives no special concession to girls for their culinary achievements

One, who has lived and loved her parents & brothers & sisters, almost as
much as you do for 20-25 years of her life;

One, who has bravely agreed to leave behind all that, her home, people who love her, to adopt your home, your family, your ways and even your family ,name

One, who is somehow expected to be a master-chef from day #1, while you sleep oblivious to her predicament in her new circumstances, environment and that kitchen

One, who is expected to make the tea, first thing in the morning and cook
food at the end of the day, even if she is as tired as you are, maybe more,
and yet never ever expected to complain; to be a servant, a cook, a mother,
a wife, even if she doesn’t want to; and is learning just like you are as
to what you want from her; and is clumsy and sloppy at times and knows that you won’t like it if she is too demanding, or if she learns faster than  you;

One, who has her own set of friends, and that includes boys and even men at her workplace too, those, who she knows from school days and yet is willing to put all that on the back-burners to avoid your irrational jealousy, unnecessary competition and your inherent insecurities;

Yes, she can drink and dance just as well as you can, but won’t, simply
Because you won’t like it, even though you say otherwise

One, who can be late from work once in a while when deadlines, just like yours, are to be met;

One, who is doing her level best and wants to make this most important,
relationship in her entire life a grand success, if you just help her some
and trust her;

One, who just wants one thing from you, as you are the only one she knows in your entire house – your unstinted support, your sensitivities and most importantly – your understanding, or love, if you may call it.

But not many guys understand this……

Please appreciate “HER”


யோகி

புதன் கிழமை ஏப்ரல் 2, 2008

யோகி ஒருவரின் ஞானத்தைப் பார்த்த அரசன் ஒருவன் அவர் விரும்பாத போதும் கூட வற்புறுத்தி ஒரு மாளிகையை அளித்து அதில் தன்னை நல்வழியில் செலுத்துவதற்காக எப்போதும் கூடவே வசித்து வர பெரிதும் வணங்கி வேண்டினான். யோகிக்கு வந்த வாழ்வைக் காணப் பொறுக்காத ஒரு செல்வந்த பிரபு அரசரிடம் ஒரு நாள், “அரசே! அந்த யோகி ஏராளமாகப் பணத்தையும் தங்க, வெள்ளிக் கட்டிகளையும் சேர்த்து வைத்திருக்கிறார். இவற்றை அதிக வட்டிக்கு வேறு விடுகிறார். அப்படி வட்டிக்குத் தரும் போது அரசன் என்று இறக்கிறானோ அன்று இதைத் திருப்பித் தந்தால் போதும் என்று வேறு சொல்கிறார்.” என்றார்.

குழம்பிப் போன அரசனிடம் திரும்பத் திரும்ப இதைச் சொல்லவே அவனுக்கு யோகியின் மீது கோபம் வந்தது.

அரச சபை கூடியிருந்த போது நேரடியாகவே கோபத்துடன் அரசன் அவரிடம் கேட்டான்:-” என்ன யோகியாரே! பணத்தையும் தங்கம் முதலானவற்றையும் அதிக வட்டிக்கு மக்களுக்கு விடுவதோடு நான் இறக்கும் போது அவற்றை வாங்கிக் கொள்வதாகச் சொல்கிறீர்களாமே, இது உண்மையா?”

யோகிக்கு செல்வந்தரின் பொறாமையும் சூழ்ச்சியும் புரிந்தது.

மிக மெதுவாக சாந்தமான குரலில், ” ஆமாம், மன்னா! அப்படித்தான் சொல்லிக் கொடுக்கிறேன்!” என்றார்.

சபையிலுள்ளோர் ஹா என்று கூவினர். செல்வந்தரோ இன்றோடு யோகியின் அத்தியாயம் முடிந்தது என்று மகிழ்ந்தார்.

அரசர் ஆச்சரியத்தோடு யோகியைப் பார்த்து, “என்ன தைரியம் இருந்தால் இப்படி செய்வீர்கள்? செய்வதை ஒப்புக் கொள்ளவும் செய்வீர்கள்?” என்றான்.

அரசனை நோக்கிய யோகி, “மன்னரே! நான் விடும் அகாத வட்டிக்கு எந்தக் குடிமகனானாலும் கூட அசலையும் வட்டியையும் தர முடியுமா என்ன? அவர்கள் என்ன செய்வார்கள்? அரசன் இறக்கவே கூடாது! நெடு நாள் வாழ வேண்டும். நாங்கள் பணத்தை திருப்பி அளிக்கத் தேவையே இருக்கக் கூடாது என்று இறைவனை தினம் தோறும் பிரார்த்தனை அல்லவா செய்வார்கள். இந்தக் கூட்டுப் பிரார்த்தனையால் அரசர் நெடு நாள் வாழ்ந்து தேசம் சுபிட்சமாக இருக்குமல்லவா! அதனால் அப்படிச் செய்தேன்” என்றார்.

மனம் குளிர்ந்த அரசன், “யோகியாரே! கஜானாவில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் இன்னும் எடுத்துக் கொள்ளுங்கள்! மக்கள் நான் நீண்ட நாள் வாழுமாறு பிரார்த்தனை செய்ய உதவி புரியுங்கள்” என்று வினயமாக வேண்டினான்.

யோகியாரோ, “அரசரே! இதற்குத் தங்கள் கஜானா பணத்தை எடுக்க வேண்டுமா,என்ன, இதோ இருக்கிறாரே, இந்த செல்வந்தர் இவரிடம் உள்ளதே போதுமே” என்றார். எதுவும் பேச முடியாமல் செல்வந்தர் திகைக்க, அரசன் மோதிக்க, மக்கள் மகிழ யோகியார் செல்வந்தரின் பணம் அனைத்தையும் எடுத்து மிக அதிக வட்டிக்கு ஏழைகளுக்கு வழங்கினார்! அதை தானமாகப் பெற்ற மக்கள் அரசனை வாழ்த்தினர்!

முக்தி அடைந்த விதம்.

சாது வேஷம் போட்ட சோம்பேறிகள் சிலர் ஒரு கிராமத்திலிருந்த தோட்டத்தை ஆக்கிரமித்து நன்றாக உண்டு கொழுத்து வந்தனர். ஒரு நாள் பழுத்த பழங்களைப் பறிக்க எண்ணிய ஒரு தொப்பை சந்நியாசி மரத்தின் உச்சியில் உள்ள கிளையின் மீது கிடுகிடுவென்று ஏறினார். அவரது பாரம் தாங்காமல் கிளை முறிய கீழே விழுந்த அவர், இறந்து போனார். அந்த சமயத்தில் யோகி ஒருவர் அங்கே வர, கூடவே கிராம மக்களும் கிராம அதிகாரியும் வந்து குழுமி விட்டனர். கிராம அதிகாரி (போலி) சாதுக்களைப் பார்த்து இவர் எப்படி இறந்தார் என்று வினவ அவர்கள் முழித்தனர். யோகி, கிராம அதிகாரியை நோக்கி, “அவர் பாரம் தாங்காமல் அவரே முக்தி அடைந்தார்!” என்று பதில் சொன்னார்.

ஞானம் வரும் நேரம்!

“ஒரு நிமிடத்தில் ஞானம் அடைந்து விட முடியுமா என்ன ?” சிஷ்யன் குருவிடம் சந்தேகத்தோடு கேட்டான்.

“நிச்சயமாக அடைந்து விட முடியும்” என்று குரு பதில் சொன்னார்.
“ஆனால், குருவே, ஒரு நிமிடம் என்பது மிகவும் குறைவான நேரமாக இருக்கிறதே”-சந்தேகம் தீராத சிஷ்யன் மென்று விழுங்கினான்.

“59 விநாடிகள் அதிகமாக இருக்கிறது, அப்பனே!” என்றார் குரு.
மற்ற சிஷ்யர்கள் எல்லோரும் இந்த உரையாடலைக் கேட்டு திகைத்தனர்.
பிறகு குரு கேட்டார்:-

“சந்திரனைப் பார்க்க எவ்வளவு நேரம் பிடிக்கிறது?”

“உடனே பார்க்கலாமே!… அப்படியானால் எல்லோராலும் ஏன் ஞானம் பெற முடியவில்லை? ஆன்மீக சாதனையில் இவ்வளவு காலம் ஏன் செலவிட வேண்டியிருக்கிறது?”- சிஷ்யர்கள் வினவினர்.

“கண்களை மூடிக்கொண்டே இருக்கும் ஒருவர் கண்ணைத் திறக்க எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்! ஆனால் கண்ணைத் திறந்து விட்டால் க்ஷண மாத்திரத்திலேயே பார்க்க முடியும், இல்லையா!” சாதுவின் விளக்கத்தை சிஷ்யர்கள் புரிந்து கொண்டனர்!

(post copied from another forum)