இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!TAKE IT EASY

புதன் கிழமை ஜூன் 3, 2009

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!TAKE IT EASY smile.gif
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி
இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும்
இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும்,
அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..!
ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில்
[அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ்
சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க.
அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து
வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல்
விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா,
அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு,
அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க
கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக்
கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க..
[ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய்
நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி
கப்படிக்க வைப்பீங்க.!

11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ… ஒரு கும்பல் வந்து
ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம்
பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட்
பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ
இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட
மறக்கவே மாட்டீங்க..!

13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன்
செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு
சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர்
சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப்
பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க
நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில்,
3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா
வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட
அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம். பிரஷர் குக்கர்,
காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர்,
மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல கறிக்குழம்பு வச்சுத்
தின்னுட்டு புள்ளக்குட்டியோட சந்தோஷமா விழுந்து கெடக்க
மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, ஊருல தகராறு
பண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன்
பார்ப்பீங்க..

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே
உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..!


வெப்கேமிரா வைத்திருக்கின்றீர்களா?

வியாழன் டிசம்பர் 18, 2008
வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.

யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?

எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?
பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?
அது எப்படி சாத்தியமாயிற்று?

புனேயில் உள்ள  Asian School of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா.

ஆம் நம்புங்கள்; அவள் அறையில் உடைமாற்றுவதையும் அவளின் அந்தரங்கங்களையும் படம்பிடித்தது அந்த வெப்கேமிராதான்.

மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர்           ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள்.

ஆனால் அவளுக்குத் தெரியாமலையே கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் / புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது

அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.

உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.
இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.

இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.

கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.
‘தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்’
- ரோகஸ் நாக்பால், ப்ரசிடண்ட் ஆப் ஆசியன் ஸ்கூல் ஆப் சைபர் லா
‘தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.’
- விஜய் முகி – கணிணித்துறை வல்லுனர்

இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.
ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். தங்களது அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள்.
இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.

எனக்கு ஈமெயிலில் வந்தது நீங்களும் எச்சரிக்கையாக இருக்க உங்களுக்காக


HOW TO DETECT A 2-WAY MIRROR?

வெள்ளிக்கிழமை மே 2, 2008

GIRLS BE CAREFUL

Have you seen recent advertisement of M/S SAINT GOBAIN GLASSES shown in

TELEVISION\’ S – Then you must have known about 2 Way mirror)

How to determine if a mirror is 2 way or not (Not a Joke!)?

Not to scare you, but to make sure that you aware. Many of the Hotels
and Textile showrooms cheat the customers this way.

HOW TO DETECT A 2-WAY MIRROR?

When we visit toilets, bathrooms, hotel rooms, changing rooms, etc.,

How many of you know for sure that the seemingly ordinary mirror
hanging on the wall is a real mirror, or actually a 2-way mirror i.e .,
they can

see you, but you can\’t see them. There have been many cases of people
installing 2-way mirrors in female changing rooms or bathroom or
bedrooms.

It is very difficult to positively identify the surface by just looking

at it. So, how do we determine with any amount of certainty what type
of

mirror we are looking at?

CONDUCT THIS SIMPLE TEST:

Place the tip of your fingernail against the reflective surface and if
there is a GAP between your fingernail and the image of the nail,

then it is a GENUINE mirror.

However, if your fingernail DIRECTLY TOUCHES the image of your nail,
then BEWARE, IT IS A 2-WAY MIRROR! (There may be someone seeing you
from the other side). So remember, every time you see a mirror, do the

\”fingernail test.\” It doesn\’t cost you anything. It is simple to do.

This is a really good thing to do. The reason there is a gap on a real
mirror, is because the silver is on the back of the mirror UNDER the
glass.

Whereas with a two-way mirror, the silver is on the surface. Keep it in

mind! Make sure and check every time you enter in hotel rooms.

Ladies: Share this with your friends.

Men: Share this with your sisters, wives, daughters, friends,
colleagues, etc.


Can you say it?

புதன் கிழமை மார்ச் 26, 2008


122.gif

ஜோக்ஸ்

வியாழன் மார்ச் 6, 2008

ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள்..” ஃபாதர்.. நான் இரண்டு பெண் கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல் பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..?

ஃபாதர் சொன்னார்..” என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும் கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம் பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டுவிடும்.”

அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே கொண்டுவந்து விட்டாள்.

பாதிரியார் பெருமையுடன், “என் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார்” என்றார்.

அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி வேண்டிக்கொண்டிருந்தன. பெண் கிளிகளோ, “அழகிய அசுரா.. அழகிய அசுரா.. அத்து மீற ஆசை இல்லையா..?” என பாடின.

தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு” என்றது உற்சாகத்துடன்..!!!!